Sri Lanka News
சிவனொளிபாதமலையில் போதைப்பொருட்களுடன் ஆறு இளைஞர்கள் கைது

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த ஆறு இளைஞர்கள் பல்வேறு போதைப்பொருட்களுடன் நேற்று நல்லத்தண்ணி நகரில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 33 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், மொறட்டுவை, மாத்தறை, பாயாகலை, வங்கதெனிய, ஹக்மனை மற்றும் மீகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து கஞ்சா, ஐஸ், போதை மாத்திரைகள் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சந்தேகநபர்களை ஹட்டன் பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்ரீகர்களில் சந்தேகத்திற்கு இடமானவர்களை நல்லத்தண்ணி பொலிஸார் தொடர்ந்து தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.




