Sri Lanka News

சம்மாந்துறை,​நெய்னாகாடு அல்-அக்ஸா வித்தியாலய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு புலமைப்பரிசில் வழங்கல்.

சம்மாந்துறை நெய்னாகாடு அல்-அக்ஸா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வசதியற்ற மாணவர்களுக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் முயற்சியினால் கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கி வைத்தார்.

இதில் பாடசாலை அதிபர் எம்.வீ.எம்.சபீர், பிரதி அதிபர் எம்.எல்.எம்.யாக்கூப், ஓய்வுபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர் முகம்மட் தம்பி, மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது பாடசாலையில் கல்வி கற்கும் தேவையுடைய மாணவர்களுக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் குடும்பத்தின் நிதி உதவியில் கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில் 25 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் 2020ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button