கா பொ தர சாதாரண பரீட்சையில்6A முதல் 9A வரை சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

செய்தி நிருபர்: முபாறக் அஸ்லம்
10/8/2025 ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில், கா. பொ. தர சாதாரண பரீட்சையில் 6A முதல் 9A வரை சிறப்பாகச் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மிக விமர்சையாக இடம்பெற்றது.
STR இளைஞர் அணி ஏற்பாடு செய்த மாபெரும் முப்பெரும் விழா சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ கௌரவ உறுப்பினர் அல் ஹாபிழ் ஹாதிக் இப்ராஹிம். அவர்களின் தலைமையில் மிக பிரமாண்டமாக இடம்பெற்றது
இவ் விழாவின் பிரதம அதிதியாக கௌரவ சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான மாஹிர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினார்.
சிறப்பு அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் கௌரவ தவிசாருமான நௌசாட், மற்றும் சம்மாந்துறை பிரதேச உப தவிசாளர் வினோத்காந்
மேலும், பிரதேச சபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், பெற்றோர் மற்றும் பல பொதுமக்களும்
கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
