Sri Lanka News

தென் மாகாண ஆளுநராக சுசிரிபால மானவடு பதவிப்பிரமாணம் – ஜனாதிபதி அநுர குமாரவினால் நியமனம்..!

தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அரசியலமைப்பின் 154 ஆ பிரிவின்படி, நேற்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கலை மன்றத்தின் வானொலி, பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களுக்கான உப குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றும் பேராசிரியர் சுசிரிபால மானவடு, ருஹுணு பல்கலைக்கழகத்தில் சிங்களக் கல்விப் பிரிவின் தலைவராகவும், ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகராகவும் பணியாற்றியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button