Sports
இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கெதிரான தொடர்களிலிருந்து அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் (pat cummins) விலகியுள்ளார்.

பெட் கம்மின்ஸ் விலகல்
இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கெதிரான தொடர்களிலிருந்து அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் (pat cummins) விலகியுள்ளார்.
உபாதை காரணமாக அவர் குறித்த தொடர்களிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள Ashes தொடருக்குள் அவர் முழு உடற்தகுதியைப் பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய அணி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளதுடன், நியூசிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியுடன் 3 டி20 போட்டிகளில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.