Sri Lanka News

நாடு முழுவதும் சோதனை நடவடிக்கையில் ஒரே நாளில் 524 பேர் கைது!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஊடாக நாடு முழுவதும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் நேற்று (23) 524 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய, நேற்றைய தினம் 30,236 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போதே இந்த சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச் செயல்களுடன் நேரடி தொடர்புடைய 17 பேர் அடையாளம் காணப்பட்டதுடன், பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 200 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

அத்துடன், இந்தச் சோதனை நடவடிக்கையின் போது குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 429 பேரும், கவனயீனமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 53 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 4,706 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button