மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை இன்று ஆரம்பம்

முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொது ஆலோசனை அமர்வுகள் இன்று (18) தொடங்குகிறது.
இலங்கை மின்சார சபையானது 2025ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சார கட்டணங்களில் 6.8% அதிகரிப்பை முன்மொழிந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
இத் திருத்தங்கள் தொடர்பிலான பொதுமக்களின் கருத்துக்களைப் பெற ஆணைக்கழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் எழுத்துப்பூர்வமாகவும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாய்மொழி கருத்துக்களைப் பெற ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய ஒன்பது பொது ஆலோசனைகள் நடத்தப்படும்.
அதன்படி, வாய்மொழி கருத்துக்களைப் பகிர்வதற்கான அமர்வுகள் இன்று தொடங்குகிறது.
2025 ஆம் ஆண்டின் மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை தொடர்பான எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை அக்டோபர் 7, 2025க்கு முன் பின்வரும் முறைகள் மூலம் சமர்ப்பிக்கலாம் என்று PUCSL மேலும் தெரிவித்துள்ளது:
மின்னஞ்சல் – info@pucsl.gov.lk
வட்ஸ்அப் – 0764271030
ஃபேஸ்புக் – www.facebook.com/pucsl
தபால் மூலம் –
மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை – 2025
இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு, 6ஆவது மாடி, சிலோன் வங்கி வர்த்தக கோபுரம், கொழும்பு -03.




