Sri Lanka News
ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி பட்டறை!

யுனிசெப் நிதியுதவியுடன் சொண்ட் நிறுவனம் நடைமுறைப்படுத்தும் சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூகம் திட்டத்தின் கீழ் வடமாகாணத்தினைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி பட்டறையொன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று ஒரு நாள் செயலமர்வு நடைபெற்றது.
சொண்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் ச.செந்துராசாவின் தலைமையுரையுடன் பயிற்சி நிகழ்வுகள் ஆரம்பமானது.
இப்பயிற்சியில் வளவாளராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறைப் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் கலந்துகொண்டார்.




