அரசு இலச்சினையில் உருமாறிய சிங்கம்: பொது பாதுகாப்பு அமைச்சின் இணையதளம் முடக்கம்!

பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் அதிகார்வபூர்வ இணையதள பக்கத்தில் அரசாங்க சின்னத்தில் உள்ள சிங்கம் உருமாற்றப்பட்டுள்ளது.
இதனால் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் அதிகார்வபூர்வ இணையதளம் தற்காலிகமாக செயல் இழந்துள்ளது.
இந்த தளத்தை பார்வை இடுபவர்களுக்கு இணையதளம் தற்காலிகமாக செயல்படவில்லை என்றும், அதில் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விசாரணைகளை அனுப்புமாறும் அறிவிப்பு காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் அரச இலச்சினை சின்னத்தில் காணப்படுகின்ற சிங்கம் சிதைந்து காணப்படுவது, முறையற்ற ஏஐ பயன்பாடு பற்றிய விவாதங்களை எழுப்பியுள்ளது.
இது ஏஐ யின் தவறான பயன்பாட்டையும், இணையதள பராமரிப்பையும் பலரது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.



