News
எலிக்காய்ச்சலுக்கு குடும்பஸ்தர் பலி

யாழில் எலிக்காய்ச்சல் காரணமாகக 42 வயதான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார. கடந்த 17ம் திகதி அவருக்கு காய்ச்சல் ஏற்ப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை அவர் இரத்த வாந்தி எடுத்துள்ளதுடன் யாழ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அல்வாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்கென வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது




