Sri Lanka News

அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்கின் சேவை நிறைவு: ஜனாதிபதி அநுர நேரில் பாராட்டு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்து, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள ஜூலி சாங் (Julie Chung), நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தார்.

ஜூலி சாங் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.

அத்துடன், ‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளின் போது அவர் வழங்கிய விசேட ஆதரவிற்கும் ஜனாதிபதி இதன்போது பாராட்டுத் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button