சாய்ந்தமருதில் தேசிய வீடமைப்பு திட்டத்தின் அடிக்கல் நாட்டும் வைபவம் ஆரம்பம்

செய்தியாளர் சதாம்
“உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் சாய்ந்தமருதில் தெரிவு செய்யப்பட்ட பயனாளியின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் வைபவம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் இன்று (01/08/2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது!!!
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு
புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் மற்றும் அடிக்கல் நடும் நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு அங்கமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாரை மாவட்ட முகாமைத்துவ தொழிநுட்பம் , மற்றும் அதிகாரிகள்,பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், செயற்பட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தேசிய மக்கள் சக்தி நிந்தவூர்