அ.தி.மு.க பொறுப்பை உதறிய ஈரோடு சத்யபாமா: இ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு

பதவி வகித்தவருமான செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தார். இதற்கு, 10 நாட்கள் கெடு அளிப்பதாகவும், அதற்குள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பொறுப்பில் இருந்து நீக்கியதால் தங்களுக்கும் பதவி வேண்டாம் என அவரது ஆதரவாளர்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதம் மூலம் தலைமைக்கு அனுப்பி உள்ளனர். இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யும், செங்கோட்டையன் ஆதரவாளருமான சத்தியபாமா தனது கட்சி பதவியை ராஜினாமா செய்யவதாக அறிவித்தார்.
இதுகுறித்து முன்னாள் எம்.பி சத்தியபாமா கூறுகையில், “செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். எதற்கும் தயாராக இருக்கிறேன். அனைவரும் ஒன்றுபட்டு இயக்கத்துக்காக பாடுபட வேண்டும் என்பதே லட்சியம்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் பதவியை பறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து உள்ளார். அ.தி.மு.க. தலைமைச்செயற்குழு பொறுப்பில் இருந்து முன்னாள் எம்.பி. சத்தியபாமா நீக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையன் ஆதரவாளரான சத்தியபாமாவின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.