Sports
தடைகளை கடந்து வெற்றியை சுவைக்குமா இந்தியா?

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகிறது.
ஏற்கனவே, இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளில் இங்கிலாந்து இரண்டு போட்டிகளிலும் இந்தியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தொடரை கைப்பற்றும் அல்லது சமப்படுத்தும் போட்டியாகவே இன்றைய போட்டி அமையவுள்ளது.
இந்தநிலையில் இரண்டு அணிகளுக்கும் இன்றைய போட்டி முக்கியமானதாக அமைந்துள்ளது.
நிதிஷ் குமார் ரெட்டி, ஆகாஷ் டீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்தநிலையில், குல்தீப் யாதவ் மற்றும் அன்சுல் கம்போஜ் ஆகியோர் இந்திய அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்