Sri Lanka News
அம்பலாங்கொடையில் அதிர்ச்சி: 18 மாடி கட்டிடத்தின் 15வது மாடியில் சடலம் மீட்பு!

காலியில் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓலகம பிரதேசத்தில் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும் 18 மாடிகள் உடைய கட்டிடம் ஒன்றின் 15 ஆவது மாடியில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (2) பிற்பகல் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சடலமானது பலப்பிட்டிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




