Sports

மிரட்டிய மும்பை அணி ,அதிர்ந்த அரங்கம்- வெற்றியின் இரகசியம் என்ன?

நியூசண்டிகரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 ரன்களில் வீழ்த்தி 2வது தகுதிச்சுற்றுக்கு மும்பை அணி தகுதி பெற்றது.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது. 229 ரன்கள் துரத்திய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

குஜராத் அணி கடைசி இரு லீக் போட்டிகளில் 230 ரன்கள் வரை சேர்த்த ஆட்டங்களில் அழுத்தம் தாங்காமல் தோல்வியைத் தழுவியது.

அதிலும் முக்கிய பேட்டர் ஜாஸ் பட்லர் அணியில் இல்லை. இந்த பலவீனத்தைப் புரிந்து கொண்ட மும்பை அணி, தன்னுடைய இலக்கை 200 ரன்களுக்கு மேல் வைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் களமிறங்கியது

மும்பை அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோ (47), ரோஹித் சர்மா உறுதுணையாக இருந்தனர்.

கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியாவின் கேமியோ 200 ரன்களுக்கு மேல் செல்ல உதவியது.

இந்த வெற்றியையடுத்து, 2வது தகுதிச்சுற்றில் பஞ்சாப் அணியுடன் நாளை ஆமதாபாத்தில் நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணி மோதுகிறது. இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button