2026ஆம் ஆண்டுக்கான அரச விடுமுறை நாட்காட்டி வெளியீடு: மொத்தம் 26 நாட்கள் விடுமுறை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்கான அரச விடுமுறை நாட்கள் அடங்கிய நாட்காட்டியை அரச அச்சுத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரச அச்சுத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026ஆம் ஆண்டில் மொத்தம் 26 நாட்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகப்படியான விடுமுறை நாட்கள் கிடைக்கவுள்ளமை விசேட அம்சமாகும். இவ்விரு மாதங்களிலும் தலா 4 நாட்கள் வீதம் விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
🔹சிங்கள – தமிழ் புத்தாண்டு: 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ளது.
🔹மே தினம் மற்றும் வெசாக்: மே மாதம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை மே தினம் மற்றும் வெசாக் பௌர்ணமி தினம் ஆகிய இரண்டும் ஒரே நாளில் வருகின்றன.
🔹கிறிஸ்துமஸ்: டிசம்பர் மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
இந்த அரச விடுமுறை நாட்களானது அஞ்சல் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் வானிலை ஆய்வுத் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த விடுமுறை நாட்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில், அவை குறித்த விபரங்கள் வர்த்தமானி அறிவித்தல் ஊடாகப் பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும் என அரச அச்சுத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.




