India NewsSri Lanka News
எனக்குப் பிடித்த விஜய் திரைத்துறையில் இருந்து விலகி புதிய பயணத்தைத் தொடங்குவது தொடர்பில் அவரின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன் ; நாமல்

“நடிகர் விஜய் எப்போதும் எனக்குப் பிடித்த கலைஞர்களில் ஒருவராக இருந்து வருகிறார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சினிமாவில் அவருடைய பயணமும், திரையில் அவர் வெளிப்படுத்திய ஆற்றலும் உண்மையாகவே தனித்துவமானது மற்றும் மறக்க முடியாதது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்வின் இந்த அத்தியாயத்தை முடித்துக்கொண்டு ஒரு புதிய பயணத்தைத் தொடங்கும்போது, சினிமா நிச்சயமாக அவருடைய துடிப்பையும் இருப்பையும் இழந்து தவிக்கும். அவருக்கு வரவிருக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்.




