Sports

இந்திய அணி அபார வெற்றி

இந்திய அணி அபார வெற்றி

இந்திய அணி அபார வெற்றி
சுற்றுலா தென்னாப்பிரிக்க அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

தர்மசாலாவில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணித்தலைவர் Aiden Markram அதிகபட்சமாக 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Arshdeep Singh, Harshit Rana, Varun Chakravarthy மற்றும் Kuldeep Yadav ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் 118 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 15.5 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இந்தி அணி சார்பில் Abhishek Sharma அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதற்கமைய 05 போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 ஓவர் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button