Sports
பங்களாதேஷ் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா?

செய்தியாளர் NMM.Siraj
பங்களாதேஷ் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா?
பங்களாதேஷ் அணியின் இருபதுக்கு-20 உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தெரிவித்துள்ளது.
குறித்த போட்டிகளை நடத்துவதற்கு இதுவரை பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என ஐ.சி.சி குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் எடுக்கப்படும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை மேலும் தெரிவித்துள்ளது.




