Sri Lanka News
பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் அதிகரிப்பு..! – வைத்தியர் எச்சரிக்கை

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
14 அல்லது 15 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் பலர் சிகரெட்டுகளைப் பரிசோதித்துப் பார்க்க முனைகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இந்த வகையில் புகைபிடிப்பது நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்குப் பெரிதும் வழிவகுக்கும் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்தார்.




