NewsSri Lanka News

சம்மாந்துறை அல் மதீனா வித்தியாலய ஐந்தாம் தர புலமைப்பரிசில் வெற்றியாளர்களுக்குக் கௌரவம்!

✍️மஜீட். ARM

​சம்மாந்துறை அல் மதீனா வித்தியாலயத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் பிரமாண்டமான நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. அதிபர் ரனீஷா அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு இனிதே இடம்பெற்றது.


​இந்தக் கௌரவிப்பு நிகழ்வின் பிரதம அதிதியாகச் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். மகேந்திர குமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
​மேலும், கௌரவ அதிதிகளாகச் சிறப்பு சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.எம். ஃபஹூமி மற்றும் ஏ.சி.எம். நயீம் .
​ அம்பாறை மாவட்ட நீர்வளங்கள் வடிகாலமைப்பு சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஜவாஹிர்,
​அல்மாஸ் ஜுவல்லரி நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஷாத் மற்றும்
ஆர்.ஜே. கோல்ட் ஹவுஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாயா
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button