Sri Lanka News
செம்மணி அகழ்வில் 46 சான்றுப்பொருட்கள் நீதிமன்றில் கையளிப்பு – சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன்

யாழ்ப்பாணம் செம்மணியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகளில் மொத்தமாக 46 சான்றுப்பொருட்கள் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
செம்மணி பகுதியில் 21ஆவது நாளாகவும் நேற்று(26) முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணியின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
யாழ்.செம்மணி அகழ்வுப்பணிகள் யாழ்ப்பாணம் நீதவான் A.A.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டன.
தொல்பொருள் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ, தலைமையிலான குழுவினர் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் முன்னிலையில் அகழ்வுப்பணி இடம்பெற்றது