வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை; கறுப்பு உடையில் எதிரணி எதிர்ப்பு

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் ‘மிடிகம லாசா’ என்றழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கறுப்பு ஆடையை அணிந்து இன்று எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்தனர்.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர நேற்று காலை வெலிகம பிரதேச சபையில் உள்ள அவரது அறையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரில் ஒருவர் கடிதம் ஒன்றில் கையெழுத்தை பெற்றுக்கொள்வதை போல் பிரதேச சபைத் தலைவரின் அறைக்குள் நுழைந்து அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது பலத்த காயமடைந்த தலைவர், மாத்தறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
லசந்த விக்கிரமசேகர, பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் தற்போது சிறையில் உள்ள ‘ஹரக் கட்டா’ என்ற நதுன் சிந்தகவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் லசந்த விக்ரமசேகர படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கறுப்பு ஆடையை அணிந்து இன்று எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்தனர்.




