Sri Lanka News
மலையக மார்க்கம் பாதிப்பு – இன்று 10 தொடருந்து சேவைகள் இரத்து

கடந்த மூன்று நாட்களில் மலையகத் தொடருந்து மார்க்கத்தில் 42 தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு காரணமாக மலையகத் தொடருந்து மார்க்கத்தில் (உடரட்ட) தொடருந்து போக்குவரத்து தொடர்ந்து தடைப்பட்டுள்ளதால், இன்று (ஒக்டோபர் 22, 2025) காலை வேளையில் சுமார் 10 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலைமை காரணமாக, கொழும்பிலிருந்து இயக்கப்படும் தொடருந்துகள் ரம்புக்கனை வரையிலும், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் தொடருந்துகள் பேராதனை வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், கடந்த மூன்று நாட்களாக மலையகத் தொடருந்து மார்க்கத்தில் மாத்திரம் மொத்தம் 42 தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




