18 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இம் மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 75,657 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 396,274 ஆகும்.
மேலும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 167,886, ரஷ்யாவிலிருந்து 125,950, ஜெர்மனியிலிருந்து 111,677 மற்றும் சீனாவிலிருந்து 108,040 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
மேலும் பிரான்ஸிலிருந்து 90,250, அவுஸ்திரேலியாவிலிருந்து 81,040, நெதர்லாவிலிருற்து 53,922, அமெரிக்காவிலிருந்து 50,027 சுற்றுலாப் பயணிகளும் இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இத்தாலியிலிருந்து 39,932, கனடாவிலிருந்து 37,606, ஸ்பெயினிலிருந்து 36,430, போலந்திலிருந்து 36,389 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.



