News

அரசாங்கம் வலுவடைகிறது – சொல்கிறார் எஸ்.பி.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உலகை வென்று மிகச் சிறப்பாக முன்னேறி வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார். ஊடக சந்திப்பை நடத்தி இவ்வாறு தெரிவித்த எஸ்.பி. திசாநாயக்க மேலும் கூறியதாவது,

ஜப்பான், சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் இலங்கைக்கு இந்தப் பயணத்தில் உதவும் என்று நான் நம்புகிறேன். சீன கம்யூனிஸ்ட் அரசாங்கம் செய்தது போல் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம் தாமதமின்றி முதலீட்டாளர்களை நாட்டுக்கு அழைக்க வேண்டும்.

அரசாங்கம் வலுவடைந்து வருகிறது. எதிர்க்கட்சி நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது.

தற்பொழுது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொய் சொல்லவில்லை.

வரலாற்றில் ஒருபோதும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன கூறியிருந்த நிலையில் இம்முறை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமோக வெற்றியை ஈட்டியது.

கடந்த கால அரசாங்கங்களின் பலவீனங்கள், மோசடிகள் காரணமாக அவர்கள் தோல்வியடைந்தனர்.

உண்மையில் இந்த அரசாங்கம் பொய்யுரைக்கவில்லை. கடந்த அரசாங்கங்களில் இருந்தவர்கள் பொய்யுரைத்த காரணத்தினால் தோல்வியை தழுவினார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு வழங்கிய வாக்குகளில் 60 வீதமானவை ஜனாதிபதி அநுரவுக்கு கிடைத்தன. பொதுத் தேர்தலில் இந்த வாக்குகள் மேலும் பெருவாரியாக அதிகரித்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button