News
IMFஇன் ஐந்தாவது மதிப்பாய்வு செப்டெம்பர் – நவம்பருக்கு இடையில் நடத்த திட்டம்

இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு 2025 செப்டெம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்தப்படும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், அதன் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசக் நேற்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
நான்காவது மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததன் மூலம் இலங்கைக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி கிடைத்துள்ளது.