இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தான் அமைச்சர் ஆமிர்கான் முத்தாகி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்

டெல்லியில் இன்று(10/10/25) ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஆமிர்கான் முத்தாகியுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் முக்கிய சந்திப்பு நடைபெற்றன. ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி, இருதரப்பு வர்த்தகம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம், மக்களிடையேயான உறவுகள் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான இந்தியாவின் ஆதரவு குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும், பாகிஸ்தான் ஆப்கன் எல்லை பகுதிகளை தாக்குவது தவறு எனவும், இந்தியாவுடன் ஆப்கனுக்கு நல்ல உறவில் இருக்கிறது எனவும் ஆப்கன் அமைச்சர் அறிவித்தார். மேலும் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் உயிர்காக்கும் வசதிகளுடன் கூடிய 5 ஆம்புலன்ஸ் வாகனங்களை பரிசாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வழங்கினார்.




