சம்மாந்துறை அல்-ஹம்ரா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு

சம்மாந்துறை அல்-ஹம்ரா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு இன்று (அக்டோபர் 9) மிகவும் விமர்சையாகவும் உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது.
பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோரின் பங்களிப்புடன் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வலய கல்வி ஆசிரியர் ஆலோசராக எ. அஹமட் லெப்பை பாடசாலையின் மற்றும் அதிபர் திரு. S. H. முஹம்மட் பரீஸ் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் எஸ். டி. சி. உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்கள் என கலந்து கொண்டனர்.
நீண்ட காலமாகச் சேவையாற்றிய மற்றும் கற்பித்தல் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஆசிரியர்களுக்குச் சிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் அதிபர் மற்றும் பிரதம அதிதியால் வழங்கப்பட்டன.
இதன் போது ஆசிரியர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் மற்றும் மாணவர்களின் நடனம், கவிதை நிகழ்ச்சி என சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




