News
VAT வரி முறை இன்று முதல் இரத்து

SVAT அல்லது எளிமைப்படுத்தப்பட்ட VAT வரி முறை இன்று முதல் இரத்து செய்யப்படுகிறது.
SVAT முறை இரத்து செய்யப்படுவதன் மூலம் VAT மீளப்பெறும் நடைமுறை, முறைப்படுத்தப்படவில்லை எனவும் இதனால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்றுமதியாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
செயற்பாட்டு நிதியை மீளப்பெறும் வழிமுறை இன்றி எளிதாக்கப்பட்ட பெறுமதி சேர் வரி திட்டத்தை இரத்துச் செய்வதன் மூலம் இயற்கை இறப்பர் தொழிற்துறை பரவலான நிதி நெருக்கடியை எதிர்கொள்ளுமென குறிப்பிடப்படுகிறது.
அத்துடன், சிறு தொழில் உரிமையாளர்களின் வாழ்வாதாரம், ஏற்றுமதி போட்டித்தன்மை மற்றும் அந்நிய செலாவணியை அச்சுறுத்தும் என இலங்கை இறப்பர் வர்த்தகர் குழு தெரிவித்துள்ளது.



