முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிற்கும் யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பு

முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிற்கும் யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (29) மாலை ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.
தனது பிறந்த தினத்தை ஒட்டி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் சபாநாயகர் கரு ஜேயசூர்யா யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று தனது பிறந்த தினத்தை கொண்டாடினார்.
இறுதியாக நேற்று மாலை ஆயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் சபாநாயகர் ஆயருடன் சமகால விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியை கற்பித்தலும் அவர்கள் தென்னிலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள இடங்களை பார்வையிடுவதும்
தென் இலங்கையில் உள்ள சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு இங்குள்ள கலாச்சாரங்களை அறிந்து கொள்ளுதலும் ஆகிய விடயங்களை முன்னெடுத்து செல்வதை நோக்காக கொண்டு இந்த விஜயம் இடம்பெற்றதாகவும் இதன் போது தெரிவித்தார்.




