India NewsSri Lanka News
திரௌபதி முர்முவிடம் நற்சான்று பத்திரத்தை வழங்கிய இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மகிஷினி கொலோன்னே தமது நற்சான்று பத்திரத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கினார்.
இதன்படி, ராஷ்டிரபதி பவனில் இன்று நடைபெற்ற நிகழ்வில் இந்தியக் குடியரசுத் தலைவர், இலங்கையின் உயர் ஸ்தானிகரிடமிருந்து நியமனப் பத்திரங்களை ஏற்றுக்கொண்டார்.
இலங்கையின் அரசியலமைப்பு பேரவையால் நியமனம் அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர், மகிஷினி கொலோன்னே இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார்.
முன்னதாக, 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்தியாவுக்கான துணை உயர் ஸ்தானிகராக மகிஷினி கொலோன்னே பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது