News
மின்சாரத் துறை ஊழியர் போராட்டம்; மின்வெட்டு இருக்காது என அரசாங்கம் உறுதி

இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்த போதிலும், மின் விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படாது என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, மின்சார சபையை மறுசீரமைப்பது அவசியம் என்றாலும், அது தனியார்மயமாக்கப்படாது எனத் தெரிவித்தார். மின்சார சபை அரச நிறுவனமாகவே இருக்கும் என்றும், பொதுமக்களுக்குச் சலுகைகளை வழங்குவதில் கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.




