சாரதி அனுமதிப்பத்திரங்களில் பாரிய மோசடி கண்டுபிடிப்பு

2 தசாப்தங்களுக்கு மேல் ஒரே தனியார் நிறுவனத்தின் மூலம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதில் பெரும் மோசடி ஏற்பட்டுள்ளதாகக் கப்பல் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஒரே நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதன் மூலம் பாரிய அளவில் நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தனியார் நிறுவனத்தால் ஒரு சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடுவதற்கான செலவு ரூபாய் 534.54 ஆக இருந்த நிலையில், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தால் (RMV) அதே வேலையை வெறும் ரூபாய் 367 செலவில் செய்ய முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, சாரதி அனுமதிப்பத்திரங்களை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமே (RMV) அச்சிட வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.
இதற்காக அச்சிடும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுவருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.



