India NewsSri Lanka News
இந்திய நிறுவனங்களுக்கு இலங்கையில் வாய்ப்பு

வெளிநாடுகளில் தமது வர்த்தகங்களை விரிவாக்கம் செய்ய விரும்பும் இந்திய நிறுவனங்களுக்கு, இலங்கையில் சிறந்த வாய்ப்புள்ளதாக ஐடிசி குழுமத்தின் தலைமை நிர்வாகி சஞ்சீவ் பூரி கூறியுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கலாசார மற்றும் வரலாற்று உறவுகள் காணப்படுகின்றன.
இதன் காரணமாக ஒருவரையொருவர் புரிந்து கொள்ளமுடிகிறது.
புதிதாக ஒரு இடத்துக்கு செல்லும்போது, இந்தக் கலாசாரம் முக்கியமானது.
இந்தநிலையில், விரைவில் இந்தியாவும் இலங்கையும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளதாக ஐடிசி குழுமத்தின் தலைமை நிர்வாகி சஞ்சீவ் பூரி தெரிவித்துள்ளார்.