India News
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அளித்த மனு தொடர்பில் வெளிவந்த தகவல்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகின்றார்.
மக்களை நேரடியாக சந்திக்கும் அவரது பிரச்சார சுற்றுப்பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தை தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் இருந்து எதிர்வரும் 13 ஆம் திகதி தொடங்கி அதே நாளில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
எதிர்வரும் 13 ஆம் திகதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வீதி உலா செல்வதற்கும், சத்திரம் பேருந்து நிலையத்தில் சிறப்புரையாற்றுவதற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என மனு கொடுத்தார்.
விஜய் பேசுவதற்கு அனுமதி வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. வீதி உலா நடத்த பொலிஸ் அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.