Sri Lanka News
அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்கள் – இன்று விசேட திட்டம்!

அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்கான சிறப்பு வேலைத்திட்டத்தை இன்று (01) முதல் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
“செயிரி வாரம்” என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் இன்று முதலாம் திகதி முதல் 04 ஆம் திகதி வரை செயல்படுத்தப்படும்.
அரச நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் தங்கள் கடமைகளை சுதந்திரமாகவும் முறையாகவும் செய்வதற்கு சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
‘க்ளீன் ஶ்ரீ லங்கா’ தேசிய திட்டத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்படவுள்ளதுடன், தேவையான மற்றும் தேவையற்ற பொருட்களை அடையாளம் கண்டு தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவது இதன்போது இடம்பெறவுள்ளது.