Sri Lanka News

அவசர கலந்துரையாடல்: நாட்டின் சிறைச்சாலை உயர் அதிகாரிகள் கொழும்பில்!

நாடு முழுவதிலுமுள்ள அனைத்துச் சிறைச்சாலை உயர் அதிகாரிகளும் கொழும்புக்கு அழைக்கப்பட்டு, இன்று (ஜூன் 23) காலை 8:30 மணிக்கு நீதி அமைச்சரின் தலைமையில் நீதி அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதிலுமிருந்து வந்த அனைத்து சிறைச்சாலை அத்தியட்சகர்கள், ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள் பங்கேற்றனர்.

முக்கியமாகப் பேசப்பட்டவை:

🔷 சிறைச்சாலைகளில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

🔷சிறைச்சாலைகள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார்.

இந்தக் கலந்துரையாடல் சிறைச்சாலை அமைப்பில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#சிறைச்சாலை #நீதிஅமைச்சு #இலங்கை #அவசரகூட்டம் #சட்டம்ஒழுங்கு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button