Sports
கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2025-ஆம் ஆண்டிலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்கிறார்.

சவுதி லீக்கில் அவரது அசாத்தியமான விளையாட்டு திறமை, கோல் பொழிவுகள் மற்றும் நிலையான ஆட்ட ஆளுமை காரணமாக, அவர் இன்று அந்த லீக்கின் முகமாக திகழ்கிறார்.
துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்ற புகழ்பெற்ற ‘குளோப் சாக்கர் விருதுகள்’ (Globe Soccer Awards) 2025 விழாவில், ரொனால்டோவுக்கு ‘சிறந்த மத்திய கிழக்கு வீரர்’ (Best Middle East Player) விருது வழங்கப்பட்டது.
இந்த பெருமைக்குரிய விருதை துபாய் ஆட்சியாளர் குடும்பத்தைச் சேர்ந்த மேதகு ஷேக் முகமது பின் ரஷித் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் கையளித்தார்.
விருது பெற்ற பின்னர், ரொனால்டோ தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, “வயது ஒரு எண் மட்டுமே… எனது ஆர்வம், உழைப்பு, இலக்கு இன்னும் அதே தீவிரத்தில் தொடர்கிறது” என்று கூறி, ரசிகர்களின் ஆரவாரத்தை வெள்ளமாக மாற்றினார்.




