World News

தென்கொரியாவை முற்றாக அழித்துவிடுவோம் – எச்சரிக்கும் வடகொரியா

வடகொரியா மற்றும் தென்கொரியாவுக்கிடையில் பல வருடங்களாக மோதல் நீடித்து வருகின்றது.

இந்நிலையில் வடகொரியாவை மிரட்டும் வகையில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா அவ்வப்போது கூட்டு இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்த மாதம் 09ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.

இதனால் கடும் கோபத்துக்குள்ளாகியுள்ள வடகொரியா, தென்கொரியாவை கடுமையாக எச்சரித்துள்ளது.

தங்களது நாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயல்பட்டால் தென்கொரியாவை முற்றாக அழித்துவிடுவோம் என்று வடகொரியா எச்சரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button