News
zoom தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்துக்கு இணைக்கப்படும் ரணில்?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பாக நிபுணர்கள் குழு சமர்ப்பித்த மருத்துவ அறிக்கையின்படி, அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியே அழைத்துச் செல்ல முடியாது என்று சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நீதவான் தனக்கு அறிவித்தால், ரணில் விக்ரமசிங்க உடனடியாக சூம் (zoom) தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்துடன் இணைக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, சூம் (zoom) தொழில்நுட்பத்திற்குத் தேவையான வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்