Sports

3 தடைவகள் சுப்பர் ஓவர் வீசப்பட்ட பின்னர் முடிவு காணப்பட்ட போட்டியாக நெதர்லாந்து – நபாள அணிகளுக்கிடையிலான T20 கிரிக்கெட் போட்டி பதிவானது

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்தாடிய நேபாள அணியும் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்களைப் பெற்றதால் போட்டி சமநிலை அடைந்தது.

வெற்றியை தீர்மானிக்க வீசப்பட்ட சுப்பர் ஓவரிலும் 2 அணிகளும் தலா 19 ஓட்டங்களைப் பெற்றன.

இதனால் இரண்டாவது தடவையாக சுப்பர் ஓவர் வீசப்பட்டதோடு அதிலும் 2 அணிகளும் தலா 17 ஓட்டங்களைப் பெற்றன.

தொடர்ந்து மூன்றாவது சுப்பர் ஓவர் வீசப்பட்டதுடன் அதில் நெதர்லாந்து 6 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் நேபாள அணியால் ஓர் ஓட்டத்தைக்கூட பெற முடியாது போது இறுதியில் நெதர்லாந்து அணி வெற்றிபெற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button