Sri Lanka News
அஸ்வெசும இரண்டாம் கட்டப் பதிவுக்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு

நாடளாவிய ரீதியில் அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு தகுதியானவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு கிடைக்கப்பெறாத, தகுதியான குடும்பங்களை இனம் காணும் செயற்பாடுக்கு அமைவாக இடம்பெற்று வருகிறது .
அந்த வகையில் இன்று (18) நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த ஏராளமான பொதுமக்கள் நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியோரத்தில் அஸ்வெசும இரண்டாம் கட்டப் பதிவுக்கு நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.