சீன எக்ஸிம் வங்கியிடம் கடனை எதிர்பார்க்கும் ஜனாதிபதி

சீன எக்ஸிம் வங்கியிடம் இருந்து கடனை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி அமைச்சரவை அனுமதியை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தாமதமாகியுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை விரைந்து முடிக்கும் நோக்கில் அரசாங்க நிதியிலிருந்து 438 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதியை ஜனாதிபதி கோரியுள்ளார்.
இதேவேளை, இம்மாத ஆரம்பத்தில், கடவத்தை முதல் மீரிகம வரையிலான 37.1 கிலோமீற்றர் நீளமுள்ள பாதைக்கான ஒப்பந்ததாரரிடம் இருந்து நிலுவையில் உள்ள நிதி உரிமை கோரல்களைப் பகுப்பாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு பல பில்லியன் ரூபாய் கொடுப்பனவுகளை செலுத்தி, மீதமுள்ள வீதியை அமைக்கப் பரிந்துரைத்துள்ளது.
இவ்வாறான சமீபத்திய தாமதங்கள் பெரும்பாலும் பொருளாதார நெருக்கடியால் உருவானவை.
இது எக்ஸிம் வங்கியிடமிருந்து கடன் வழங்கல்களை நிறுத்தி வைப்பதற்கும் நீண்ட கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கும் வழிவகுத்தது.