புதிய நியமனங்களுக்கு உயர்பதவிகள் குழுவில் அனுமதி

தூதுவர் ஒருவர், 2 அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் 4 நிறுவனத் தலைவர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கமைய, ஓமான் நாட்டுக்கான தூதுவராக விஜேசிங்க ஆரச்சிகே கபில சஞ்சீவ டி அல்விஸின் நியமனத்துக்கு குழு அனுமதி வழங்கியது.
அத்துடன், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளராக எம்.ஏ.எல்.எஸ்.என்.கே. மந்திரிநாயக்கவுக்கும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக ஜே.எம். திலகா ஜயசுந்தரவுக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.
மேலும், இலங்கை வங்கியின் தலைவராக காவிந்த டி சொய்ஸா, வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவராக பிரியந்த வெதமுல்ல, டெவலபேர்ஸ் (லங்கா) லிமிட்டட் நிறுவனத்தின் தலைவராக பிரவீர் டி. சமரசிங்க மற்றும் மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகத்தின் தலைவராக ஜயதிஸ்ஸ ஆனந்த பதிரகே ஆகியோரின் நியமனங்களுக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.