கல்முனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் முன்னாள் எம்.பி ஹரீஸின் 50 லட்சம் ஒதுக்கீட்டில் சோலார் பொருத்தப்பட்டது !

(சர்ஜுன் லாபீர்)
நாட்டின் பொருளாதார நெருக்கடியில் சிக்கி பல்வேறு சமூக கட்டமைப்புக்களும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளமைக்கு நிவாரணமளிக்கும் வகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் டீ- 100 திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு அங்கமாக கல்முனை முஹைத்தீன் பெரிய பள்ளிவாசலுக்கு 44KW திறன் கொண்ட சோலார் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
கல்முனை முஹைத்தீன் பெரிய பள்ளிவாசலின் நீண்டநாள் பிரச்சினையாக இருந்து வந்த பெருந்தொகை மின்சார கட்டண பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் விதமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் தனது டீ- 100 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டு 50 லட்சம் பெறுமதியான சோலார் சிஸ்டம் கல்முனை முஹைத்தீன் பெரிய பள்ளிவாசலின் மேல்தளத்தில் பொருத்தப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் நிறைவு பணிகளை கள விஜயம் செய்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் இன்று(13)பார்வையிட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் முன்னெடுத்த இந்த சோலார் சிஸ்டம் பொருத்தும் வேலைத்திட்டத்தினால் பள்ளிவாசல் மாதாந்தம் இலங்கை மின்சார சபைக்கு செலுத்திவந்த மின் பட்டியல் கட்டணம் 85 ஆயிரம் இப்போது இல்லாமலாகி எவ்வித கட்டணமும் இப்போது நாங்கள் செலுத்துவதில்லை என்றும் இந்த சோலார் மூலம் மாதாந்தம் 70-75 ஆயிரம் பள்ளிவாசலுக்கு மேலதிகமாக வருமானமாக வருவதாகவும் இந்த வருமானத்தினூடாக பள்ளிவாசலின் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் இப்படியான நிலையான வருமான மூலங்கள் கிடைக்க உதவிய முன்னாள் எம்.பி எச்.எம்.எம். ஹரீஸுக்கு நன்றிகளையும் தமது பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக கல்முனை முஹைத்தீன் பெரிய பள்ளிவாசல் செயலாளர் முபாரிஸ் ஹனீபா இதன்போது தெரிவித்தார்.
மேலும் இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் ,கல்முனை பிரதேச செயலாளர் டி.எம்.எம் அன்சார்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம் ஜெளபர் நம்பிகையாளர் சபைத் தலைவர் எம்.ஐ அப்துல் அஸீஸ்,செயலாளர் எம்.எச் முபாரிஸ்,பொருளாளர் எஸ்.எம் ரிப்னாஸ் ,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எச் கலீலூர் ரஹ்மான்,பிரிலியன் விளையாட்டு கழக தலைவர் எம்.எஸ்.எம் பழீல்,தேசமானிய ஏ.பி ஜெளபர் உட்பட நிர்வாக சபை உறுப்பிசோலார் 44kw உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


