Sri Lanka News
சீறும் கடல் அலைகள்: திருகோணமலை மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

திருகோணமலையில் இன்று காற்றின் வேகம் அதிகமாக உள்ளதுடன் கடல் அலைகள் சீற்றமாக வீசுவதனை அவதானிக்க முடிவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் மீனவர்கள் தொழில் நிமித்தம் கடலுக்கு செல்வதாயின் அவதானமாக செயற்படுமாறும் கூறப்படுகிறது.
இதேவேளை மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




