Sri Lanka News
Cleon Srilanka திட்டத்தின் கீழ் பதூர் கிராமிய அபிவிருத்தி குழுவின் ஒருங்கிணைப்பில் இன்று

Cleon Srilanka திட்டத்தின் கீழ் பதூர் கிராமிய அபிவிருத்தி குழுவின் ஒருங்கிணைப்பில் இன்று (29.07.2025) கடற்கரை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், பிரதேச செயலகத்தின் கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு பங்கேற்பை வழங்கினர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, கடற்கரை பகுதிகளின் சுத்தத்தையும் சமூகப் பங்களிப்பையும் வலியுறுத்துவதாகும்.




