News
விமான எரிபொருள் நிரப்பும் இரு வாகனங்களை வழங்கிய அமெரிக்கா

அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து இரண்டு உயர் மதிப்புள்ள விமான எரிபொருள் நிரப்பும் வாகனங்களை இலங்கை விமானப்படை (SLAF) பெற்றுள்ளது.
இவ்விடயம் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிப்பதாக உள்ளது .
இலவசமாக வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் வாகனங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
ஒரு அறிக்கையில், அமெரிக்க அரசாங்கம் மற்றும் அமெரிக்க தூதரகத்தின் பங்களிப்புக்காக இலங்கை விமானப்படை தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.